/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முழு நேரம் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவரா?
/
முழு நேரம் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவரா?
முழு நேரம் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவரா?
முழு நேரம் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவரா?
ADDED : மார் 22, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்;
வெங்கடேசன்(பா.ஜ): பொதுப்பணித் துறையில் 15 ஆண்டுகள் மேலாக 37 முழு நேர தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் எப்போது பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்: இந்த 37 முழு நேர தினக்கூலி ஊழியர்களை பல்நோக்கு ஊழியர் பதவிக்கு பணியமர்த்துவதற்கான கோப்பு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி துறை கூடுதல் விபரங்களை கேட்டுள்ளது. அந்த விபரங்கள் பொதுப்பணித் துறையின் பல்வேறு பிரிவுகளில் கேட்கப்பட்டது. விரைவில் அரசாணை வெளியிடப்படும்.