/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் நிதியுதவி காலத்தோடு வழங்கப்படுமா?
/
காமராஜர் நிதியுதவி காலத்தோடு வழங்கப்படுமா?
ADDED : ஜன 26, 2025 05:47 AM
காமராஜர் நிதியுதவியினை காலத்தோடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, காமராஜர் கல்வி உதவி திட்டத்தினை கொண்டு வந்தார். இந்த திட்டத்தால் தான் ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவு நனவாகி வருகிறது.
வழக்கமாக, காமராஜர் கல்வி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு விடும். ஆனால், கடந்த 2022ம் ஆண்டில் இருந்து காமராஜர் திட்டத்தின் கீழ் நிதியுதவி இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் இத்திட்டத்தின் கீழ் கல்லுாரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கூறுகையில், 'கடந்த 2022ம் ஆண்டில் இருந்தே இன்னும் காமராஜர் நிதியுதவி தரப்படவில்லை. இதனால் மருத்துவம், இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
காமராஜர் கல்வி நிதியுதவி கிடைக்காமல் கல்லுாரிகளும் நிதி நெருக்கடியில் உள்ளன. எனவே, காலத்தோடு காமராஜர் நிதியுதவி வழங்க முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கேட்க கூடாது.
ஆதிதிராவிடர் நலத் துறையே நேரடியாக செலுத்தும் என்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதேபோன்று இதர பிரிவு மாணவர்களுக்கும் கல்வி கட்டணம் கேட்க கூடாது என்று அரசு கல்லுாரிகளுக்கு சுற்றிக்கை மூலம் அறிவிக்க வேண்டும்.
இதன் மூலம் மாணவர்களுக்கு நெருக்கடி குறையும்' என்றார்.

