/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா முதல்வர் ரங்கசாமி பளீச்
/
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா முதல்வர் ரங்கசாமி பளீச்
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா முதல்வர் ரங்கசாமி பளீச்
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா முதல்வர் ரங்கசாமி பளீச்
ADDED : மார் 25, 2025 03:57 AM
புதுச்சேரி: சட்டசபையின் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:
சிவசங்கர்(சுயேச்சை): புதுச்சேரியில் பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வருமா.
முதல்வர் ரங்கசாமி: உள்ளாட்சி தேர்தலை நடத்திடலாமா. நீங்க சொல்லுங்கள்.
சிவசங்கர்(சுயேச்சை): உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் மாநிலம் வளர்ச்சி பெறும். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலை நீங்கள் தான் நடத்தினீர்கள். இப்போது நீங்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவீர்கள் என எதிர்பார்க்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் மாநிலத்திற்கு நல்லது.இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 400 கோடி நிதி வரும்.
சபாநாயகர் செல்வம்: உள்ளாட்சி தேர்தலை நடத்த மக்கள் ஏதும் எதிர்பார்க்கவில்லை. சிவசங்கர் எம்.எல்.ஏ., தான் ஆசைப்படுகிறார். நீங்கள் சொல்லுவதுபோல் நிதி ஏதும் வராது. உட்காருங்கள்.
முதல்வர் ரங்கசாமி: உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பரிந்துரை செய்ய அரசு நியமித்த நீதிபதி சசிதரன் ஆணையம் அதன் பரிந்துரையை அளித்த பின்னர் இடஒதுக்கீட்டுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும்.