தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாணவர் விடுதிகளை மூடுவதா? அதிகாரிகளுக்கு அமைச்சர் கேள்வி

மாணவர் விடுதிகளை மூடுவதா? அதிகாரிகளுக்கு அமைச்சர் கேள்வி

மாணவர் விடுதிகளை மூடுவதா? அதிகாரிகளுக்கு அமைச்சர் கேள்வி


UPDATED : அக் 25, 2026 09:41 PM

ADDED : அக் 25, 2026 09:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 09:41 PM ADDED : அக் 25, 2026 09:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை மூடிய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ராஜவேலு சரமாரியாகக் கேள்வி எழுப்பும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி நகரப் பகுதிகள் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு முன்பாக விடுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், பாகூர் மற்றும் கரையாம்புத்துாரில் உள்ள மாணவர் விடுதிகள் தனியார் கட்டடங்களில் இயங்கி வருவதையும், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததையும் காரணம் காட்டி, அவற்றை மூட உத்தரவிட்டனர். அந்த விடுதிகள் மூடப்பட்டன.

தற்போது சென்டாக் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், பாகூர், கரையாம்புத்துார் பகுதிகளில் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி வசதி இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகவல், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜவேலுவின் கவனத்துக்குச் சென்றது. இதனால் அதிருப்தியடைந்த அவர், உடனடியாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார். அப்போது, தனியார் கட்டடம் சரியில்லை என்றால், அரசு கட்டடத்தில் விடுதியை நடத்த ஏற்பாடு செய்யலாம். அதைவிட்டுவிட்டு, ஒரேயடியாக மாணவர் விடுதியை மூடிவிடுவதா.. மாணவர்கள் எங்கே போய்த் தங்குவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பாகூர், கரையாம்புத்துார் பகுதிகளில் மாணவர் விடுதிகளை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சர் ராஜவேலு அதிகாரிகளிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us