தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு


ADDED : அக் 25, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 11:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தொடங்கி நுாறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், விஜயதசமி விழாவையொட்டி, புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

மதியம் 3:00 மணிக்கு புதுபஸ் ஸ்டாண்டில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலத்தை, அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், கடற்கரை சாலை, காந்தி சிலை எதிரே உள்ள திடலில் நிறைவடைந்தது.

ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணி வகுத்தனர். ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்திற்கு வழிநெடுக்கிலும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பாரதமாதா சிலைக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விஜயதசமி விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ்., வட தமிழக அறிவுசார் பிரிவு தலைவர் நீலகண்டன், அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி., முன்னாள் சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், பாஸ்கர், தீப்பாஞ்சான், அசோக் பாபு பங்கேற்றனர். 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us