/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிள்ளையார்குப்பத்தில் சேதமடைந்த விளையாட்டு திடல் சீரமைக்கப்படுமா?
/
பிள்ளையார்குப்பத்தில் சேதமடைந்த விளையாட்டு திடல் சீரமைக்கப்படுமா?
பிள்ளையார்குப்பத்தில் சேதமடைந்த விளையாட்டு திடல் சீரமைக்கப்படுமா?
பிள்ளையார்குப்பத்தில் சேதமடைந்த விளையாட்டு திடல் சீரமைக்கப்படுமா?
ADDED : அக் 17, 2024 12:16 AM

பாகூர் : பிள்ளையார்குப்பம் பேட்டில் சேதமடைந்துள்ள விளையாட்டு திடலை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பம் பேட் அங்கன்வாடி மையம் அருகே, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இளைஞர்கள் நலன்கருதி சிறிய அளவிலான விளையாட்டு திடல் உருவாக்கப்பட்டு, பாதுகாப்பு மதில் சுவர், ைஹமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டது.
இந்த திடலில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வாலிபால், கபடி விளையாடியும், உடற்பயிற்சி மேற்கொண்டனர்.
மேலும், விளையாட்டு திடல் வளாகத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், விளையாட்டு திடல் போதிய பராமரிப்பின்றி முழுதும் சேதமடைந்துள்ளது. அங்கிருந்த, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மதில் சுவர், ைஹமாஸ் விளக்குகளும் சேதமடைந்துள்ளன. இதனால், விளையாட்டு திடலை இளைஞர்கள், குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பிள்ளையார்குப்பம் பேட் விளையாட்டு திடலை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.