/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஷப்பூச்சி கூடமான சிறுவர் பூங்கா காரை மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
/
விஷப்பூச்சி கூடமான சிறுவர் பூங்கா காரை மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
விஷப்பூச்சி கூடமான சிறுவர் பூங்கா காரை மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
விஷப்பூச்சி கூடமான சிறுவர் பூங்கா காரை மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
ADDED : டிச 19, 2024 06:36 AM

காரைக்கால்:' காரைக்காலில் சிறுவர் விளையாட்டு பூங்காவில் மழை நீர் சூழ்ந்து புதர் மண்டி, விஷப்பூச்சிகள் கூடமாக மாறியுள்ளதால், குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
காரைக்கால் நகரில் இந்திரா நகர், சேத்திலால் நகர், ராஜிவ்காந்தி நகர், மதகடி உள்ளிட்ட பகுதியை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
அப்பகுதி மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சம் இல்லாததால் இந்திரா நகர் பகுதியில் நகராட்சி சார்பில், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி மேடை அமைக்கப்பட்டது. இதில் ஊஞ்சல், சறுக்குமரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த பூங்காவை, நகராட்சி நிர்வாகம் சாரியாக பரமரிக்காததால், புதர் மண்டி, சிறுவர்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. சமீபத்தில் பெய்த கனமழையில், பூங்காவில் மழை நீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களில் பரவும் அபாயம் உள்ளது.
மேலும், விஷப்பூச்சிகள் அதிகம் காணப்படுகிறது. இவை, பூங்காவில் ஒரு பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம் மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கிறது. இதனால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்தில் உள்ளனர்.
எனவே, நோய் பரப்பும் கூடாரமாக மாறியுள்ள பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

