/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அழிந்து வரும் செங்காவி ஓவிய கலையை மீட்க அரசு முன்வருமா
/
அழிந்து வரும் செங்காவி ஓவிய கலையை மீட்க அரசு முன்வருமா
அழிந்து வரும் செங்காவி ஓவிய கலையை மீட்க அரசு முன்வருமா
அழிந்து வரும் செங்காவி ஓவிய கலையை மீட்க அரசு முன்வருமா
ADDED : அக் 15, 2024 06:32 AM

அரியாங்குப்பம்: அழிந்து வரும் செங்காவி ஓவியத்தை மீட்க , பல்வேறு இடங்களில் அரசு முகாம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில், பல்வேறு வகையில், கலைஞர்கள் கைவினை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். ஓவியம் வரையும் கலை நாளுக்கு, நாள் அழிந்து வருகிறது. பழங்காலத்தில், உள்ள கோவில்களில் பாறைகளில் கரிக்கட்டி சித்திர வரைந்தனர். அந்த ஓவியம் கால போக்கில் மறைந்து, செங்காவி ஒவியத்தை கோவிலில் வரைந்து வந்தனர். அந்த ஓவியமும் தற்போது, மறைந்து வருகிறது.
வில்லியனுாரை சேர்ந்த, ஓவியர் துரை. இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஓவியம் வரைந்து வருகிறார். முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில், பல்வேறு வகையான, ஒவியங்களை வரைந்து வரும் அவர், சிதம்பரம் நடராஜ சாமியை, செங்காவி சித்திரம் மூலம் வரைந்து வருகிறார். இந்த ஓவியத்தை வரைவதற்கு, முட்டை வெள்ளை கரு, கடுகா தண்ணீர், இளநீர், வேலம் பிசினி, செம்மண் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, செங்காவி சித்திரத்தை வரைந்துள்ளார். மேலும், அவர், பைபர் பொருட் மூலம் சாமி சிலைகள், சித்தர்கள் மற்றும் தலைவர்களின் உருவத்தை செய்து வருகிறார்.
இதுகுறித்து ஓவியர் கூறுகையில்,
பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே ஓவியம் வரையும் கலை மறைந்து வருகிறது. அழிவில் செல்லும் ஓவியக்கலை பாதுகாக்க, சுற்றுலாத்துறை, பல்வேறு இடங்களில் முகாம் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறைந்த வருமானத்தை கொண்டு, ஓவியத்தை வரைந்து வருகிறேன்.
அரசு ஊக்கமளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினால், அழிந்து வரும் இந்த கலையை மீட்க முடியும் எனக்கூறினார்.