/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலிவடைந்த சார்பு நிறுவனங்கள் மீது அரசு... முடிவெடுக்குமா? அதிகரித்துவரும் நிதி சுமையால் நெருக்கடி
/
நலிவடைந்த சார்பு நிறுவனங்கள் மீது அரசு... முடிவெடுக்குமா? அதிகரித்துவரும் நிதி சுமையால் நெருக்கடி
நலிவடைந்த சார்பு நிறுவனங்கள் மீது அரசு... முடிவெடுக்குமா? அதிகரித்துவரும் நிதி சுமையால் நெருக்கடி
நலிவடைந்த சார்பு நிறுவனங்கள் மீது அரசு... முடிவெடுக்குமா? அதிகரித்துவரும் நிதி சுமையால் நெருக்கடி
ADDED : அக் 03, 2024 04:53 AM
புதுச்சேரி : தள்ளாட்டம் கண்டுள்ள அரசு சார்பு நிறுவனங்கள் குறித்து கவர்னர் முதல்வர் இணைந்து தெளிவாக முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் 48 அரசு துறைகள் உள்ளன. இதுமட்டுமின்றி 12 அரசு சார்பு நிறுவனங்கள் உள்ளன. பொதுமக்களுக்கு துரித சேவையாற்றும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசு சார்பு நிறுவனங்களில் புதுச்சேரி சாராய வடிசாலை குழுமம், மின் உற்பத்தி குழுமத்தினை தவிர்த்து மற்றவை அனைத்தும் மூடுவிழாவை நோக்கி சென்றுவிட்டன.
ஆனால், அதில் பணிபுரியும் ஊழியர்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது. பல மாதமாக சம்பளம் கிடைக்காமல் நிலைகுலைந்துபோய் உள்ளனர்.
முந்தய ஆட்சிகளில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடி, ஆட்கள் திணிப்பால் சில அரசு சார்பு நிறுவனங்களில் ஆண்டுகணக்கில் சம்பளம் இல்லை.
ஒரு மாதம் சம்பளம் இல்லாவிட்டால், வசதி படைத்தவர்கள் கூட செலவுகளை சமாளிக்க முடியாது.
ஆண்டு கணக்கில் சம்பளம் இல்லாத சூழ்நிலையில் நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களது கையில் இருந்த நகை, மனைகள் எல்லாம் அடமானம் வைத்துவிட்டனர். உறவினர்களிடமும், தெரிந்தவர்களிடமும் கடன் வாங்கி சிக்கிதவித்து வருகின்றனர்.
கனவுகளுடன் அரசு வேலைக்கு வந்த ஊழியர்கள், 'ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்' என்று, நொந்துபோய் புலம்பி வருகின்றனர். பலர் செக்யூரிட்டியாக வேலை செய்கின்றனர். கார் ஓட்டுகின்றனர். குடும்ப செலவினை சமாளிக்க எந்த வேலை கிடைத்தாலும், அதை பார்ட் டைமாக செய்து, கொண்டு அவ்வப்போது அரசு நிறுவனங்கள் பக்கம் எட்டி பார்த்து வருகின்றனர். இது தான் இன்றைய சார்பு நிறுவனங்களில் பரிதாப நிலைமை.
விஜயன் கமிட்டி: அரசுக்கு அரசு சார்பு நிறுவனங்கள் தான் இன்றைக்கு மிகப்பெரிய சுமையாக உள்ளன. பட்ஜெட்டில் 765 கோடி ரூபாய் வரை அரசு சார்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால் அரசுக்கு வருவாய் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை.
அரசு நிறுவனங்கள் மேம்படுத்துவதற்காக காங்.,ஆட்சிக்கு காலத்தில் போடப்பட்ட விஜயன் கமிட்டியும்,மீண்டும் இந்த நிறுவனங்களை லாபத்தில் கொண்டுவர முடியுமா என தனது கவலையை வெளிப்படுத்தி, சில ஆலோசனைகளையும் அறிக்கையாக சமர்பித்து இருந்தது. ஆனால் இதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.
நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை இயக்குவது தொடர்பாக அப்போதே தெளிவாக முடிவு எடுத்து இருந்தால் பல கோடி மிச்சமாகி இருக்கும்.
ஆனால் இவ்விவகாரத்தில் காலதாமதம் செய்ய செய்ய, அரசுக்கு தான் சம்பளமாக வழங்க பல கோடி நிதிசுமை அதிகரித்து வருகின்றது. இதற்கு மேலும் அரசு சார்பு நிறுவனங்கள் மீது முடிவெடுக்காமல் விடுவது சரியல்ல.
ஒன்று, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கி நடத்த வேண்டும். இல்லையென்றால் நஷ்டத்தில் மூழ்கியுள்ள அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூடிவிட்டு ஊழியர்களுக்கு சம்பளம், கிராஜூவிட்டி உள்பட அனைத்தையும் செட்டில் செய்துவிட வேண்டும். இதுவே அனைத்து சார்பு நிறுவன ஊழியர்களின் மனக்குமுறலாக உள்ளது. இது தொடர்பாக கவர்னர், முதல்வர் விரைந்து முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.