தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உயர்த்தப்பட்ட பயிர் உற்பத்தி மானியம்... வழங்கப்படுமா? தேர்தல் அறிவிப்புக்கு முன் எதிர்பார்ப்பு

 உயர்த்தப்பட்ட பயிர் உற்பத்தி மானியம்... வழங்கப்படுமா? தேர்தல் அறிவிப்புக்கு முன் எதிர்பார்ப்பு

 உயர்த்தப்பட்ட பயிர் உற்பத்தி மானியம்... வழங்கப்படுமா? தேர்தல் அறிவிப்புக்கு முன் எதிர்பார்ப்பு


ADDED : பிப் 25, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உயர்த்தப்பட்ட பயிர் உற்பத்தி மானியம் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக வழங்கப்படுமா என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு புதுச்சேரி அரசு வேளாண் துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நகரமயமாக்கலால், விவசாய நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இருக்கும் நிலத்தில் உணவு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை கையாள அரசு ஊக்குவித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உற்பத்திய மானியமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.5 ஆயிரமும், அட்டவணை இனத்தவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அதேபோன்று, பாரம்பரிய நெல் சாகுபடி செய்வோருக்கு முறையே ரூ.8 ஆயிரம் மற்றும் ரூ.16 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உற்பத்தி மானியம் ஆண்டிற்கு ஏதேனும் இரு பருவத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி சட்டசபையில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பேசுகையில், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிர் உற்பத்தி மானியம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

அதில், பொது பிரிவினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உற்பத்தி மானியம் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்தை ரூ.6 ஆயிரமாகவும், அட்டவணை பிரிவினருக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும். அதேபோன்று பாரம்பரிய நெல் சாகுபடிக்கு பொது பிரிவினருக்கு ரூ. 8 ஆயிரத்தில் இருந்து ரூ. 9 ஆயிரமாகவும், அட்டவணை பிரிவினருக்கு ரூ. 16 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும். இதன் மூலம் மாநிலத்தில் சுமார் 12 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள் என அறிவித்தார்.

ஆனால், இதுவரை, அறிவித்து உயர்த்தப்பட்ட பயிர் மானியம் இதுவரை வழங்கப்படவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.8 ஆயிரம் மற்றும் ரூ.16 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயத்தில் விதை, இடுபொருட்கள், உரம் மற்றும் வேலை ஆட்களின் கூலி கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், அதற்கேற்ப நெல் விலை உயரவில்லை. அரசு அளிக்கும் மானியங்கள் மூலமே இழப்பை விவசாயிகள் ஈடுகட்டி வருகின்றனர். இந்நிலையில் அரசு உயர்த்தி அறிவித்த மானியத்தை ஓராண்டாகியும் வழங்காததால், விவசாயிகள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர்.

பயிர் உற்பத்தி மானியத்தை உயர்த்தி அறிவித்து 11 மாதங்களாகி விட்டது. மேலும், அரசின் ஆட்சி காலமும் முடியப் போகிறது. அதனால், அரசு அறிவித்த திட்டங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறது. அதேபோன்று, விவசாயிகளுக்கு அறிவித்த பயிர் உற்பத்திய மானிய உயர்விற்கான அரசாணையை விரைந்து வெளியிட்டு, உயர்த்தப்பட்ட மானிய தொகையை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக வழங்க வேண்டும் என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us