/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அச்சுறுத்தும் மின் கம்பம் அகற்றப்படுமா ரெட்டியார்பாளையத்தில் திக்.. திக்....

ADDED : செப் 27, 2024 05:18 AM

புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் விழும் நிலையில் அச்சுறுத்தி வரும் மின் கம்பத்தை போர்க்கால அடிப்படையில் மாற்ற வேண்டும்.
புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலை ரெட்டியார்பாளையம் எஸ்.பி.ஐ., எதிரே உள்ள உயர் அழுத்த மின் கம்பம் அடியில் வளைந்து எந்நேரமும் விழும் நிலையில் அச்சுறுத்திக்கொண்டுள்ளது. அடிப்பகுதியில் வெறும் கம்பிகள் மட்டுமே வளைந்து கொண்டு வெளியே தெரிகிறது. சிமெண்ட், ஜல்லிகள் ஏதும் மின் கம்பத்தில் இல்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன் வாகனம் ஒன்று மோதி மின்கம்பத்தின் அடிப்பகுதி முற்றிலும் உருகுலைந்தது. ஆனால் சேதமடைந்த மின் கம்பம் இன்னும் மாற்றப்படவில்லை.
இந்த மின்கம்பம் மின்ஒயர்களுடன் சாலையில் சரிந்து விழுந்தால், கொத்து கொத்தாக உயிரிழப்புகள் ஏற்படும். நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது.
சேதமடைந்த நிலையில், அச்சுறுத்தி வரும் மின் கம்பத்தை போர்க்கால அடிப்படையில் மாற்ற மின் துறையும், நெடுஞ்சாலை துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.