/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் தொடரும் அச்சுறுத்தல்: கால்நடை வளர்ப்போர் குறித்து கணக்கெடுக்கப்படுமா?
/
சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் தொடரும் அச்சுறுத்தல்: கால்நடை வளர்ப்போர் குறித்து கணக்கெடுக்கப்படுமா?
சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் தொடரும் அச்சுறுத்தல்: கால்நடை வளர்ப்போர் குறித்து கணக்கெடுக்கப்படுமா?
சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் தொடரும் அச்சுறுத்தல்: கால்நடை வளர்ப்போர் குறித்து கணக்கெடுக்கப்படுமா?
ADDED : டிச 02, 2025 04:38 AM

புதுச்சேரி: சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நகர பகுதியில் கால்நடை வளர்ப்போர் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, நகராட்சிகள் ஒழுங்குப்படுத்த வேண்டும்.
சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் புதுச்சேரி காமராஜர் சாலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு காரில் சென்றுக்கொண்டு இருந்தனர். சாரம் தென்றல் நகர், வெங்கடேஸ்வரா சந்திப்பில் கார் வந்தபோது, திடீரென மாடு ஒன்று குறுக்கே புகுந்தது.
அதை கண்டதும் அதிர்ச்சியடைந்த டிரைவர், காரை திருப்பினார். கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த கால்வாயில் இறங்கியது. அவ்வழியாக வந்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர். அதிஷ்டவசமாக அனைவரும் உயிர்தப்பினர்.
இப்படி தான் புதுச்சேரி அனைத்து நகர வீதிகளிலும் கால்நடை தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளது. சாலையில் திடீரென குறுக்கே புகும் மாடுகளால் அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் அரங்கேறி வருகின்றது.
ஆனால் மாடுகள் வளர்ப்போர் எதனை பற்றியும் துளியும் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் சாலையில் தான் திரிய விடுகின்றனர். நகராட்சிகள் எத்தனையோ தடவை எச்சரிக்கை செய்தாகிவிட்டது. இப்போது சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து ஏலம் விடப்படும் என இறுதி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கால்நடை வளர்ப்போர் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. சமூக பொறுப்பு இல்லாமல் மீண்டும் சாலையில் தான் விடுகின்றனர். நகராட்சியிடம் உரிமம் பெற்று தான், நகர பகுதியில் கால்நடைகள் வளர்க்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் வளர்க்கவில்லை.
இதனால் தான் கால்நடை வளர்ப்போர் குறித்து எந்த தகவல்களும் நகராட்சிகளிடம் இல்லை. நகர பகுதியில் கால்நடை வளர்ப்போர் குறித்து கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே சாலையில் திரியும் கால்நடைகளின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். கால்நடை உரிமையாளர்கள் பற்றி நகர பகுதியில் கணக்கெடுப்பு நடத்தி ஒழுங்குப்படுத்த கவர்னர், முதல்வர் உள்ளாட்சி துறை, நகராட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

