/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
?வருவாய் துறை காலிபணியிடங்கள் நிரப்பப்படுமா: பணி சுமையால் அதிகாரிகள் திணறல்
/
?வருவாய் துறை காலிபணியிடங்கள் நிரப்பப்படுமா: பணி சுமையால் அதிகாரிகள் திணறல்
?வருவாய் துறை காலிபணியிடங்கள் நிரப்பப்படுமா: பணி சுமையால் அதிகாரிகள் திணறல்
?வருவாய் துறை காலிபணியிடங்கள் நிரப்பப்படுமா: பணி சுமையால் அதிகாரிகள் திணறல்
ADDED : ஏப் 14, 2025 04:12 AM

புதுச்சேரி: காலி பணியிடங்கள் காலத்தோடு நிரப்பப்படாததால், ஒட்டு மொத்த வருவாய்த் துறை அதிகாரிகளும் பணி சுமையால் திணறி வருகின்றனர்.
புதுச்சேரி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய துறையாக வருவாய் துறை உள்ளது.
இத்துறையில் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர், என ஐந்து முக்கிய பதவிகளில் 394 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 192 பணியிடங்கள் வரை காலியாக உள்ள நிலையில் பணிகளில் தொய்வும், சுணக்கமும் ஏற்பட்டுள்ளது.
வருவாய் துறையில் முக்கிய பதவியான தாசில்தார் பதவியில் மொத்தமுள்ள 53 பணியிடங்களில் 11 இடங்கள் காலியாக உள்ளது.
தாசில்தார் பணியிடத்தை பொருத்தவரை 100 சதவீதம் துணை தாசில்தார்கள் கொண்டு பதவி உயர்வு மூலமே நிரப்ப வேண்டும்.
ஆனால், தகுதியான துணை தாசில்தார்கள் இருந்தும் இன்னும் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.
நியமன விதிகளின்படி ஐந்து ஆண்டுகள் பணி முடிந்த துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் பல அனுபவம் இருந்தும் துணை தாசில்தார்களுக்கு இதுநாள் வரை பதவி உயர்வு எட்டாகனியாகவே உள்ளது.
இதேபோல் துணை தாசில்தார் பணியில் மொத்தமுள்ள 56 பணியிடங்களில் 36 இடங்களும், கிராம நிர்வாக அலுவலர் பணியில் மொத்தமுள்ள 111 இடங்களில் 43 இடங்களும், கிராம நிர்வாக உதவியாளர் பணியில் மொத்தமுள்ள 119 இடங்களில் 85 இடங்களும் காலியாக உள்ளன.
இதில் நில அளவையர் பணியிடங்கள் 10 ஆண்டுகளாக நிரப்பாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கிராம உதவியாளர் பணியிடங்கள் 6 முதல் 10 ஆண்டுகள் வரை காலியாக உள்ளன. துணை தாசில்தார் பணியிடங்கள் ஐந்து ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
துணை தாசில்தார்கள் பதவி உயர்வு பெற்ற பிறகே அடுத்தடுத்த நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர்கள் பதவி உயர்வு பெற முடியும் என்பதால் ஒட்டுமொத்த வருவாய் துறையும் பதவி உயர்வு இல்லாமல் ஸ்தம்பித்துபோய் உள்ளது.
பணிச்சுமை பிறர் மீது திணிக்கப்பட்டு வருகிறது. ஒரு கிராம நிர்வாக அலுவர் ஒன்றிக்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்.
அரசு பணிக்காக இளைஞர்கள் இப்போது சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். பொது தேர்வு முடிந்த கையோடு மே மாதம் முதல் வருவாய் துறையில் ஜாதி, குடியிருப்பு என, சான்றிதழ் கேட்டு மாணவர்கள் குவிந்து விடுவர்.
இது போன்ற சூழ்நிலையில் காலி பணியிடங்களால் வருவாய் துறை அதிகாரிகள் கூடுதல் பணி சுமை ஏற்பட்டு திணறி வருகின்றனர்.
இப்பணியிடங்களை காலத்தோடு நிரப்ப முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.