sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கழிவறைகளை கவனிக்குமா டோல்கேட் நிர்வாகங்கள் வசூலில் காட்டும் அக்கறையும் மக்கள் மீது காட்டப்படுமா? டோல்கேட் கழிவறைகள் படுமோசம் வசூலில் குறி; பராமரிப்பில் மெத்தனம் *வாகன ஓட்டிகள் கடும் அவதி கட்டணம் வசூலில் காட்டும் அக்கறையை கழிவறை பராமரிப்பில் இல்லையே டோல்கேட் நிர்வாகங்கள் மீது வாகன ஓட்டிகள் ஆதங்கம்

/

கழிவறைகளை கவனிக்குமா டோல்கேட் நிர்வாகங்கள் வசூலில் காட்டும் அக்கறையும் மக்கள் மீது காட்டப்படுமா? டோல்கேட் கழிவறைகள் படுமோசம் வசூலில் குறி; பராமரிப்பில் மெத்தனம் *வாகன ஓட்டிகள் கடும் அவதி கட்டணம் வசூலில் காட்டும் அக்கறையை கழிவறை பராமரிப்பில் இல்லையே டோல்கேட் நிர்வாகங்கள் மீது வாகன ஓட்டிகள் ஆதங்கம்

கழிவறைகளை கவனிக்குமா டோல்கேட் நிர்வாகங்கள் வசூலில் காட்டும் அக்கறையும் மக்கள் மீது காட்டப்படுமா? டோல்கேட் கழிவறைகள் படுமோசம் வசூலில் குறி; பராமரிப்பில் மெத்தனம் *வாகன ஓட்டிகள் கடும் அவதி கட்டணம் வசூலில் காட்டும் அக்கறையை கழிவறை பராமரிப்பில் இல்லையே டோல்கேட் நிர்வாகங்கள் மீது வாகன ஓட்டிகள் ஆதங்கம்

கழிவறைகளை கவனிக்குமா டோல்கேட் நிர்வாகங்கள் வசூலில் காட்டும் அக்கறையும் மக்கள் மீது காட்டப்படுமா? டோல்கேட் கழிவறைகள் படுமோசம் வசூலில் குறி; பராமரிப்பில் மெத்தனம் *வாகன ஓட்டிகள் கடும் அவதி கட்டணம் வசூலில் காட்டும் அக்கறையை கழிவறை பராமரிப்பில் இல்லையே டோல்கேட் நிர்வாகங்கள் மீது வாகன ஓட்டிகள் ஆதங்கம்


ADDED : டிச 20, 2024 04:10 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோல்கேட் நிர்வாகங்கள் கட்டணம் வசூலிப்பதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியை கூட, பயணிகளுக்கான கழிவறையை கூட சரவர பராமரிக்காமல் இருப்பது, வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது போக்குவரத்தை சார்ந்தே அமைந்துள்ளது. அதிலும், குறிப்பாக சாலை போக்குவரத்தே பிரதானமாக உள்ளது. அதனை உணர்ந்தே மத்திய அரசு, விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்திட, சாலை மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை உருவாக்கி மாநிலங்களை இணைக்கும் பிரதான சாலைகளை பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தி வருகிறது.

இதற்கு செலவிடும் தொகையை, இச்சாலையை பயன்படுத்துவோர்களிடமே டோல்கேட் கட்டணமாக வசூலித்து வருகிறது. இக்கட்டணத்தில் ஒரு பகுதியை சாலை பராமரிப்பு மற்றும் வாகன ஓட்டிகளுக்கான அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர், ஆம்புலன்ஸ், அவசர மீட்பு வாகனம், கிரேன் மற்றும் கனரக வாகன ஓட்டிகள் ஓய்வுகூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த தர செலவிட வேண்டும்.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட துாரம் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் வசதிக்காக, சுங்கச்சாவடிகளில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித் தனி கழிப்பறை அமைத்து, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதி.

இதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் சென்னை-திருச்சி சாலையில் 3, உளுந்துார்பேட்டை - சேலம் சாலையில் 1, கடலுார்-சேலம் சாலையில் -2, புதுச்சேரி-கிருஷ்ணகிரி சாலையில் 2, விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் 1 என மொத்தம் 9 டோல்கேட்கள் உள்ளன.

டோல்கேட்களில் கட்டணம் வசூலிப்பதில் ஆர்வம் காட்டும் நிறுவனங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிமுறைகளை பின்பற்றாமல், அலட்சியமாக உள்ளன.

பெரும்பாலான டோல்கேட்டுகளில் கழிவறை வசதிகள் கூட சரிவர உள்ளாமல் உள்ளது. குறிப்பாக உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் திருச்சி மார்க்கத்தில் உள்ள கழிவறை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதுவும் பராமரிப்பின்றி உள்ளது. சென்னை மார்க்கத்தில் உள்ள கழிவறை பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கின்றது. அதேபோன்று ஓங்கூர் டோல்கேட் கழிவறையில் போதிய தண்ணீர் வசதியின்றி உள்ளது. கூடுதலாக கட்டியுள்ள கழிவறை கட்டடம் திறக்கப்படாமல், காட்சிப் பொருளாகவே உள்ளது. பிற டோல்கேட்டுகளில் உள்ள கழிவறைகளும் பெயரளவிலேயே உள்ளன. ஒருசில கழிவறைகள் மட்டுமே சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, சென்னை-திருச்சி மார்க்க சாலையை தவிர்த்த பிற சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளில், ஆம்புலன்ஸ், மீட்பு வாகனம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் உள்ளது.

டோல்கேட்டுகளில் உள்ள கழிவறைகளின் நிலை குறித்த விபரம் வருமாறு:

ஓங்கூர் டோல் :

இங்கு கழிவறை வசதி உள்ளது. ஆனால், தண்ணீர் இல்லை. தினசரி டிராக்டர் மூலம் கொண்டு வந்து டேங்கில் ஏற்றப்படுகிறது. கழிவறைகள் ஓரளவிற்கு சுத்தமாக உள்ளது. கூடுதல் பயன்பாட்டிற்காக புதிதாக கட்டியுள்ள கழிப்பறைகள் திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது.

விக்கிரவாண்டி:

ஆண்களுக்கு-2, பெண்களுக்கு 4 கழிப்பறைகள் உள்ளது. இவை, முறையாக சுத்தம் செய்து வருவதால், பயணிகள் முகச்சுளிப்பின்றி கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை:

தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை, வட மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சந்திப்பாக உளுந்துார்பேட்டை டோல்கேட் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த டோல்கேட்டில் தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது.

இங்கு வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள கழிவறைகள் பயன்பாடின்றி பூட்டிக் கிடந்தது. பொதுமக்களின் புகாரை தொடர்ந்து, சமீபத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், முறையாக பராமரிப்பு இல்லாததால் கழிவறை துர்நாற்றம் வீசுவதால் பயணிகள், வாகன ஓட்டிகள் கழிவறைகளுக்காக அருகில் உள்ள தனியார் ஓட்டல்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மாடூர்:

கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் டோல்கேட்டில் சாலையின் இருபுறமும் ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி, தனி கழிவறை கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் கழிவறை கதவு, பீங்கான் கோட்டைகள், குடிநீர் குழாய் உடைந்து பயன்பாடின்றி இருந்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து, உடனடியாக கழிவறைகள் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொன்னாலகரம்:

கடலுார் - விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நெய்வேலி அடுத்த பொன்னாலகரம் டோல்கேட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியே கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கழிவறை இருப்பது குறித்து அறிவிப்பு பலகை இல்லாததால், தேடும் நிலை உள்ளது.

அனுமந்தல்:

கடலுார்- விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்க்குப்பம் அடுத்த அனுமந்தல் கிராமத்தில் உள்ள டோல்கேட்டில் ஆண்கள், பெண்கள் என 4 கழிவறைகள் மட்டுமே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், கனரக வாகன ஓட்டிகள் அருகில் உள்ள காப்புக்காட்டை திறந்த வெளி கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

வனப்பகுதியில் வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அனுமந்தல் டோல்கேட்டில் கூடுதல் கழிவறைகள் கட்ட வேண்டும்.

மொரட்டாண்டி:

புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி மற்றும் செஞ்சி அருகே உள்ள நங்கிலிகொண்டான் கிராமத்தில் டோல்கேட்டுகள் உள்ளன. இதில், மொரட்டாண்டி டோல்கேட் அருகே கட்டப்பட்டுள்ள கழிவறையை இவ்வழியே செல்லும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், முறையான பராமரிப்பில்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். புதிதாக திறக்கப்பட்ட நங்கிலிகொண்டான் டோல்கேட் பகுதியில் கழிவறை வசதி உள்ளது. ஆனால், அறிவிப்பு பலகை இல்லாததால்,

தென்னாம்மாதேவி :

விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் தென்னமாதேவி கிராமத்தில் டோல்கேட் பகுதியில் பொது மக்களுக்கு என தனி கழிவறை வசதி இல்லை. ஊழியர்களிடம் கேட்டால், அலுவலகம் அருகில் ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறுகின்றனர். ஆனால், எந்த இடத்திலும், கழிப்பறை இருப்பதற்கான அறிவிப்பு பலகை இல்லை. மேலும், கழிவறையும் பராமரிப்பின்றி உள்ளது.

----------------------------------

டோல் கேட் பகுதியில் இருக்க வேண்டியது

*பொது கழிப்பிட வளாகம்

* ஹைவே நெஸ்ட் (எ) சிறு கடைகள்

* ஆம்புலன்ஸ்

*அவசர மீட்பு வாகனம்

* கிரேன்

* விபத்து போன்ற அவசர கால உதவிகளுக்கு புறநகர் பகுதிகளை தொடர்பு கொள்ள எமர்ஜன்சி கால் பூத்கள்.

* கனரக வாகனங்கள் நிறுத்தி ஓய்வெடுக்கும் மையம், அதில் குளியலறை, கழிப்பிடம் போன்ற வசதிகள் இருக்க வேண்டும்.

* அவசர உதவிக்கான டோல்பிரி தொலைபேசி எண் 1033 வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படி சாலையின் இருபுறமும் ஆங்காங்கே எழுதி வைத்திருக்க வேண்டும்.

* டோல்கேட்டில் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரியின் விபரம் மற்றும் தொலை பேசி எண் காட்சிப்படுத்த வேண்டும்.

புகார் செய்ய 1033

தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குறைபாடுகளை 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

........................................................................................

கழிவறைகள் மூடியிருப்பது ஏன்

டோல்கேட்டை சுற்றிலும், சிறியதும், பெரியதுமாக ஏராளமான ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் உள்ளன. நெடுந்துாரம் வாகனத்தில் வருபவர்கள், டோல்பிளாசா அருகில் உள்ள விசாலமான சாலையில் வாகனத்தை நிறுத்தி இயற்கை உபாதை கழிக்க செல்வர். கழிவறை சுகாதாரமாக இல்லாததால், பயணிகள் வேறு வழியின்றி அருகில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று அங்கு உணவு பொருட்களை வாங்கி கொண்டு கழிவறையை பயன்படுத்தும் நிலை உள்ளது -நிருபர்கள் குழு-.






      Dinamalar
      Follow us