/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் த.வெ.க., போட்டியிடுமா?
/
புதுச்சேரியில் த.வெ.க., போட்டியிடுமா?
ADDED : ஜன 29, 2026 03:11 AM
--- நமது நிருபர் - புதுச்சேரியில் போட்டியிட, தேர்தல் கமிஷனிடம் த.வெ.க., சார்பில் பொது சின்னம் கேட்கப்படவில்லை என தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பொது சின்னமாக, த.வெ.க.,வுக்கு 'விசில்' ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், புதுச்சேரியில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு, த.வெ.க., தரப்பில் சின்னம் கேட்கப்படவில்லை. இந்த தகவல், த.வெ.க., தரப்பில் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிய கடிதம் வாயிலாக தெரிய வந்திருக்கிறது.
கடந்த 2025 நவம்பரில் எழுதிய கடிதத்தில், தமிழகத்துக்கு மட்டுமே சின்னம் கேட்டிருக்கிறது. அதனால், புதுச்சேரியில் த.வெ.க., போட்டியிடுமா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 2025 நவம்பர் மாதம், சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில், புதுச்சேரிக்கும் விசில் சின்னம் வேண்டும் என கோரவில்லை.
அதனால், புதுச்சேரியில் த.வெ.க., போட்டியிட்டாலும், பொது சின்னமான விசில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். புதுச்சேரியில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து, கட்சி தலைமை முடிவெடுக்கும்.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் விஜய் நெருக்கமாக இருப்பதால், அவரை எதிர்த்து போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்தே, தமிழகத்துக்கு சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிய கடிதத்தில், புதுச்சேரி குறித்து எதுவும் குறிப்பிடாமல் விட்டு விட்டதாக கட்சியினர் கூறுகின்றனர்.

