/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபரிடம் நகை திருடிய பெண் கைது
/
வாலிபரிடம் நகை திருடிய பெண் கைது
ADDED : மார் 27, 2025 04:02 AM

புதுச்சேரி: அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ், 27; வாட்டர் கேன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 11ம் தேதி இரவு, அரியாங்குப்பம் டோல்கேட் தனியார் மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த பெண் ஒருவர் பிரகாஷ்ராஜியிடம் பேசி ஆசை வார்த்தை கூறினார்.
அதனை தொடர்ந்து, அந்த பெண்ணுடன் பிரகாஷ்ராஜ், உருளையன்பேட்டை பகுதியில் ஒரு விடுதியில் ரூம் எடுத்து தங்கினார். பிரகாஷ்ராஜ் போதையில், துாங்கி விட்டு எழுந்து பார்த்தபோது, அவர் கையில் அணிந்திருந்த மோதிரம், செயின், பிரேஸ்லெட், மொபைல் போன் ஆகியவற்றை அந்த பெண் திருடி சென்று தலைமறைவானார்.
பிரகாஷ்ராஜ் புகாரின் பேரில், உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிந்து, விடுதியில் வெளி பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர். அந்த பெண் தமிழக பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதனை அடுத்து, போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், ஆண்டிமடம் அடுத்த சிலம்பூர் அருந்ததி நகரை சேர்ந்த ஜெயகுமார் மனைவி கலையரசி, 30, (எ) பாஞ்சாலி என்பதும் தெரியவந்தது. பிராஷ்ராஜிடம் ஆசை வார்த்தை கூறி, நகைகளை திருடி சென்றதும், தனது வீடு கட்டுவதற்கு நகைகளை விற்றது தெரிந்தது.
பல இடங்களில்நகை பணம் திருடியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அந்த பெண்ணை, நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.