/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோர்ட் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
/
கோர்ட் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
கோர்ட் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
கோர்ட் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
ADDED : டிச 28, 2024 05:38 AM
புதுச்சேரி:   புதுச்சேரி - கடலுார் செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைந்துள்ளது. கோர்ட் வளாகத்திற்கு நேற்று காலை வந்த 40 வயதுடைய பெண் ஒருவர், திடீரென நுழைவு வாயில் எதிரே கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, குடித்ததுடன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அப்பெண் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரிடம் கிழக்கு பகுதி எஸ்.பி., இஷா சிங் மற்றும் போலீசார் விசாரித்தனர்.
அப்பெண் கூறுகையில், 'எனது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளார். அந்த வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி, அவரது தரப்பினர் என்னை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தால், போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.இதைகண்டித்து,  தீக்குளிக்க முயன்றேன். இந்த சம்பவத்தில் போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கூறினார். கோர்ட் வளாகம் எதிரே பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

