/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ. 1 லட்சம் மோசடி
/
திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ. 1 லட்சம் மோசடி
திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ. 1 லட்சம் மோசடி
திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ. 1 லட்சம் மோசடி
ADDED : ஏப் 28, 2025 04:28 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் ரூ. 1 லட்சம் மோசடி செய்த கடலுார் வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்த 46 வயது பெண் ஒருவர், கணவரை விவாகரத்து செய்துவிட்டு, மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், தனிமையில் வசித்து வந்தார்.
அப்பெண் 2வது திருமணம் செய்து கொள்ள கடந்த 2021ம் ஆண்டு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, கடலுார், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சுந்தர், 53; என்பவர், அப்பெண்ணை தொடர்பு கொண்டு திருமண செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
இதைநம்பி, அப்பெண் அந்த நபருடன் நெருக்கமாக பழகியதுடன், சுந்தர் ஆணைக்கிணங்க அடிக்கடி வாட்ஸ் ஆப் மூலம் நிர்வாணமாக வீடியோ காலில் பேசி வந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுந்தர், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்ய 1 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கியுள்ளார். ஆனால், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து, அப்பெண் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என கேட்டபோது, சுந்தர் மேலும் 2 லட்சம் ரூபாய் கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதற்கு, அப்பெண் மறுப்பு தெரிவித்ததால், சுந்தர் நீ பணம் தரவில்லை என்றால், உன்னுடைய நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் என, மிரட்டியுள்ளார். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

