/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 5 லட்சம் மோசடி
/
வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 5 லட்சம் மோசடி
ADDED : மார் 26, 2025 04:11 AM
புதுச்சேரி, : புதுச்சேரி பெண்ணிடம், சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாககூறி ரூ.5 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சுவிக்யா. இவர் ஆன்லைனில் வேலை வாய்ப்பு தேடி வந்துள்ளார். இந்நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் சுவிக்யாவைதொடர்பு கொண்ட மர்மநபர், பிரபல சாப்ட்வேர் தனியார் நிறுவனத்தின் பொது மேலாளர் என, அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்.
அவர் தங்களது நிறுவனத்தின் புதிய வேலைத்திட்டம் துவங்கப்பட உள்ளதால், அதில் வேலை வாங்கி தருவதாக கூறி, பணம் செலுத்தும்படி கூறியுள்ளார்.அதை உண்மை என, நம்பிய சுவிக்யா பல்வேறு தவணைகளாக 5 லட்சத்து 10 ஆயிரம் வரை செலுத்தியுள்ளார். ஆனால், வேலை தொடர்பான எந்தவித ஆணையும் வரவில்லை. அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.