ADDED : செப் 26, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
திருபுவனை: திருபுவனை அருகே தீராத வயிற்று வலியால் அவதியடைந்த பெண் துாக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருபுவனை அடுத்த திருவாண்டார்கோவில், சீனுவாசா நகரை சேர்ந்தவர் ராஜாராமன் மனைவி கஸ்துாரி, 55. கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். நேற்று முன்தினம் காலை வலி அதிகமானதால், மனமுடைந்த கஸ்துாரி வீட்டிற்கு அருகில் உள்ள மரக்கிளையில் துாக்குப் போட்டுக் கொண்டார். அவரை மீட்டு அரியூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தார். புகாரின்பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
