தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்து பெண் சாவு

 மயங்கி விழுந்து பெண் சாவு

 மயங்கி விழுந்து பெண் சாவு


ADDED : ஜன 10, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர், ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் ஐயனார் மனைவி துர்கா, 50. இவர், ரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் காலை துர்கா, தனது வலது கை மற்றும் முதுகில் வலி இருப்பதாக கூறினார். உடனே, அவரது மகன் அறிவழகன், அவரை பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு, அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து, மருந்து, மாத்திரை வழங்கி அனுப்பினர்.

வீட்டிற்கு வந்த துர்கா, அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, துர்கா தனது வீட்டு வாசலில் திடீரென மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு, மீண்டும் பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் அவரை பரிசோதித்து, இறந்த விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us