/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகன் திருமணத்தன்று தீ விபத்து : பெண் பலி
/
மகன் திருமணத்தன்று தீ விபத்து : பெண் பலி
ADDED : பிப் 17, 2026 05:39 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் சரவணன் மனைவி பாக்கியலட்சுமி, 57. இவருக்கு மணிகண்டன் என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர்.
, பாக்கியலட்சமி, முத்தியால்பேட்டை பெல்கிஸ் வீதியில் தனியாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். கடந்த 13ம் தேதி மகன் மணிகண்டனுக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த பாக்கியலட்சுமி அன்று மாலை விளக்கேற்றியபோது, எதிர்பாராத விதமாக புடவையில் தீ பிடித்து உடல் முழுதும் எரிந்தது. இதையடுத்து, அவரது மகள் சரண்யா மற்றும் உறவினர்கள் பாக்கியலட்சுமியை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி மாலை 5;30 மணிக்கு இறந்தார்.
புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

