ADDED : அக் 13, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்; மனநல காப்பகத்தில், ஆதரவற்ற பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில், தனியார் மனநல காப்பகம் உள்ளது. காலாப்பட்டு போ லீஸ் ஸ்டேஷன் மூலமாக, கடந்த 2019ம் ஆண்டு, மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற, 35 வயது பெண், காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு தங்கியிருந்த, அப்பெண்ணுக்கு நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. காப்பக நிர்வாகத்தினர், அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.