ADDED : அக் 20, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: திருப்பட்டினம், வடகட்டளை தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி அஞ்சம்மாள் 61. இவருக்கு நேற்று முன்தினம் இரவு வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர் பரிசோதித்து, வழியிலேயே அஞ்சம்மாள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
