ADDED : மே 12, 2025 02:17 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பெண்ணை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கூடப்பாக்கம், புதுநகர், நடுத்தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சிதா, 35. இவர், கடந்த 2004ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.
ரஞ்சிதா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ரஞ்சித்தாவை, வடிவேலன் ஆபாசமாக திட்டி, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை பல இடங்களில் கிழித்து கொலை மிரட்டல் விடுத்து, தப்பிச் சென்றார்.
இதுகுறித்து ரஞ்சிதா வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
