ADDED : டிச 08, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார், வி.மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி, 35. இவர், சென்னையைசேர்ந்த பரத்ராஜி என்பவரை திருமணம் செய்து, விவாகரத்து பெற்று தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகள் ஒதியம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
கடந்த 5ம் தேதி மகளை பள்ளியில் விட்டு சென்றார். மாலை மகளை அழைத்து வர செல்லவில்லை. இதனால் பள்ளியில் இருந்து தமிழ்செல்வியின் தம்பி மதன்ராஜீக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் இருந்த அக்கா மகளை அழைத்துவீட்டிற்கு வந்த மதன்ராஜ் வீட்டில் அக்கா இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
வில்லியனுார் போலீசார் வழக்கப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

