/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ரூ. 2 லட்சம் மோசடி
/
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ரூ. 2 லட்சம் மோசடி
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ரூ. 2 லட்சம் மோசடி
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ரூ. 2 லட்சம் மோசடி
ADDED : ஜன 29, 2025 05:09 AM
புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த 40 வயது பெண், லோன் ஆப் மூலம் பெற்ற கடனை குறிப்பிட்ட நாட்களுக்குள் திரும்பி செலுத்தியுள்ளார். இருப்பினும், மர்மநபர், அவரை தொடர்பு கொண்டு,மேலும் பணம் செலுத்தும்படி கூறி அவரது புகைப் படங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிமிரட்டினர். இதையடுத்து அப்பெண் அந்த நபருக்கு ரூ. 2 லட்சம் அனுப்பி ஏமாந்தார்.
முத்தியால்பேட்டையை சேர்ந்த லட்சுமி என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். இதைநம்பி, அவர், 26 ஆயிரத்து 945 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.லாஸ்பேட்டையை சேர்ந்த சித்தானந்தம் என்பவரின், தொலைந்து போன ஏ.டி.எம்., கார்டு மூலம்அவரது வங்கி கணக்கில் இருந்து 22 ஆயிரத்து 500 ரூபாயை எடுத்தனர்.
இதேபோல், வில்லியனுாரை சேர்ந்த பிரகாஷ், ரூ. 18 ஆயிரம், உழவர்கரையை சேர்ந்த ரஞ்சித்குமார், ரூ. 43 ஆயிரத்து 832 என மொத்தம் 5 பேர் ரூ. 3 லட்சத்து 11 ஆயிரத்து217 மோசடி கும்பலிடம் இழந்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.