தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகளிர் காங்., தலைவி ஆடியோ வைரல்: புதுச்சேரியில் பரபரப்பு

மகளிர் காங்., தலைவி ஆடியோ வைரல்: புதுச்சேரியில் பரபரப்பு

மகளிர் காங்., தலைவி ஆடியோ வைரல்: புதுச்சேரியில் பரபரப்பு


UPDATED : ஜூலை 26, 2026 11:10 PM

ADDED : ஜூலை 26, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 11:10 PM ADDED : ஜூலை 26, 2026 09:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கட்சி நிகழ்ச்சிகளுக்கு தன் சொந்த பணத்தை செலவு செய்து வருவதாக மகளிர் காங்., தலைவி நிஷா பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், மகளிர் காங்., நிஷா பேசியதாவது:

என்னை பற்றி சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். பணத்தை வாங்கி கொண்டு, யாருக்கும் தரவில்லை என கூறுகின்றனர். நான் எனது சொந்த பணத்தை செலவு செய்கிறேன். மகிளா காங்., தலைவியாவதற்கு முன்னும், பின்னும், நான்தான் செலவு செய்கிறேன். எனக்கு கட்சி 5 லட்சம் ரூபாய் தந்து உண்மை. ஆனால், நான் கூடுதலாக 7 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன்.

அஞ்சலி உங்களை கை காட்டி சென்றுவிட்டார் என, மாநில தலைவரிடம் நாள்தோறும் பணத்தை தருமாறு கேட்டு வருகிறேன். எனக்கு கட்சி சீட்டும் தரவில்லை. சம்பாதிக்கும் பதவியையும் தரவில்லை. இன்று வரை என் கை காசை செலவு செய்கிறேன். யாரிடமும் ஸ்பான்சர் வாங்காமல், மகிளிர் காங்., நடத்தி வருகின்றேன்.

கட்சி தலைவரிடம் கேட்டு ரூ. 7 லட்சத்தை வாங்கி தந்து விட்டு பேசுங்கள். என் நஷ்டத்தை யாராவது ஈடுகட்ட முடியுமா. ராகுல் வருகையின் போது ஆட்களை கூட்டியதற்கு பணம் தரவில்லை. கட்சி தலைமை தர வேண்டிய பணத்தை பெற்று தந்து வதந்தி பரப்புங்கள்.

பிரசார வண்டி வைத்துள்ளேன். வரும் நிர்வாகிகளுக்கு இட வசதி செய்து கொடுத்துள்ளேன். அனைத்து செலவுகளையும், தனி ஆளாக நின்று செய்துள்ளேன். என்னை பற்றி சந்திராகாவிடம் கூறியவர்கள், நேரில் வந்து சொல்லுங்கள். இவ்வாறு ஆடியோவில் தெரிவித்தார்.

ஆடியோ வெளியிட்டது ஏன்... ஆடியோ குறித்து நிஷா கூறுகையில், 'கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள் வதந்தி பரப்பினர். இதனை விளக்க மகளிர் காங்., கட்சி குழுவில் ஆடியோ பதிவிட்டேன். பொது வெளியில் பகிரவில்லை. கட்சி நிகழ்ச்சிகளுக்கு எனது சொந்த பணத்தை செய்ததை நிர்வாகிகளுக்கு விளக்க ஆடியோ பதிவிட்டேன்' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us