தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வி.வி.ஆர்., குரூப்ஸ்  நிர்வாக இயக்குனர் பிறந்த நாள் விழா

வி.வி.ஆர்., குரூப்ஸ்  நிர்வாக இயக்குனர் பிறந்த நாள் விழா

வி.வி.ஆர்., குரூப்ஸ்  நிர்வாக இயக்குனர் பிறந்த நாள் விழா


ADDED : ஜூலை 26, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மங்கலம் தொகுதி வி.வி.ஆர்., குரூப்ஸ் இன் நிர்வாக இயக்குனர் சத்யா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வி.வி.ஆர்., குரூப் நிர்வாக இயக்குனர் சத்யா பிறந்தநாள் விழா, மங்கலம் தொகுதி சிவரந்தகம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு, தொகுதிக்குட்பட்ட சிவரந்தகம், ஆரியப்பாளையம், பங்கூர், உறுவையாறு கிராமங்களில் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், பெண்களுக்கு தையல் இயந்திரம், இலவச புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சத்யா வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது.

சமூக சேவகர் ரங்கன் தலைமையில் நடந்த பிறந்தநாள் விழாவில் சத்யாவிற்கு தொகுதி நிர்வாகிகள் அருண், பத்மநாபன், பழனிநாதன், ஜெயமூர்த்தி, சிவபாலன், முருகன் உட்பட ஏராளமானோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us