தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய 3 பேர் கைது

பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய 3 பேர் கைது

பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய 3 பேர் கைது


ADDED : ஜூலை 26, 2026 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 10:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

வாணரப்பேட்டை ஜெயராம் செட்டியார் தோட்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 50. இவரது மனைவி விஜய சுபாஷினி, 46. இவர், முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தார்.

இவரது சகோதரிகளான மீனாட்சி, 49; வசந்தி, 54, ஆகியோரின் குடும்பத்தாருக்கு இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. விஜய சுபாஷினி கடந்த 21ம் தேதி வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், விஜய சுபாஷினி அவரது சகோதரருக்கு மொபைல் போனில் தன்னை தற்கொலைக்கு துாண்டியதாக தெரிவித்து ஆடியோ ஒன்றை அனுப்பியது தெரிய வந்தது.

இதையடுத்து ஒதியஞ்சாலை போலீசார் விஜய சுபாஷினின் சகோதரிகளான மீனாட்சி, அவரது கணவர் பிரசாந்த், மற்றொரு சகோதரி வசந்தி, அவரது கணவர் விஜயன் 58, மற்றும் உறவினரான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீரமுனிராஜ், 70, உள்பட மேலும் சிலர் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.

இந்த வழக்கில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வசந்தி, விஜயன் மற்றும் வீரமுனிராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட் டு சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us