/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு கேட்டு மகளிர் காங்., நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஏப் 07, 2025 06:18 AM

புதுச்சேரி; பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி தொகுதி வாரியாக போராட்டம் நடத்தப்படும் என, புதுச்சேரி மகளிர் காங்., மாநில தலைவி நிஷா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என லோக்சபாவில், சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ஜ., அரசு நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
எனவே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதியை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்.
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு உரிமைகளும் கிடைப்பதில்லை. 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி புதுச்சேரியின் அனைத்து தொகுதிகளிலும் மகளிர் காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
மகளிர் காங்.,பிரிவில் வழக்கறிஞர் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகளில் பாலியல் பிரச்னை குறித்து மாணவிகள் புகார் தெரிவித்தால் நீதிமன்றம் வரையில் கொண்டு சென்று அவர்களுக்கு நீதி கிடைக்க செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து புதுச்சேரி வைசியாள் வீதியில் மகளிர் காங்., நிர்வாகிகள் மாநில தலைவி நிஷா தலைமையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.