ADDED : செப் 21, 2025 11:13 PM

திருக்கனுார்:மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம் சார்பில் சுகாதாரத்துறை மூலம் பெண்களுக்கான சுகாதார சிறப்பு முகாம் நடந்தது.
நலவழி மைய பொறுப்பு மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். பொது சுகாதார மேற்பார்வையாளர் ப்ளோரா சகாயமேரி வரவேற்றார். பொது சுகாதார துணை இயக்குநர் ஷமிம்முனிசா பேகம் கலந்து கொண்டு, பெண்களுக்கான சுகாதார சிறப்பு முகாமை துவக்கி வைத்து, காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
முகாமில், இந்திராகாந்தி மற்றும் ராஜிவ்காந்தி மருத்துவமனைகளை சேர்ந்த டாக்டர்கள் பங்கேற்று, பெண்களுக்கு ரத்த சோகை, காசநோய், கர்பப்பபை வாய் புற்றுநோய், மகப்பேறு, தோல், காது, மூக்கு, தொண்டை, பல், எச்.ஐ.வி., சர்க்கரை அளவு,ரத்த அழுத்தம், ஆயுஷ் குழந்தை நல மருத்துவம், மனநலம், உடல் பருமன் உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.