/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதைவட கேபிள் அமைக்கும் பணி துவக்கம்
/
புதைவட கேபிள் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : நவ 10, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர், பட்டினத்தார் கார்டன் பகுதியில் மின்துறை மூலம் ரூ. 47 லட்சம் மதிப்பிட்டில் புதைவட கேபிள் அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் தலைமை தாங்கி, புதைவட கேபிள் இணைப்பு அமைக்கும் பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இதில், மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் ரமேஷ், செந்தில்குமார், செயற்பொறியாளர் ராஜஸ்ரீ, உதவி பொறியாளர்கள் திலகராஜ், சசிகுமார், இளநிலை பொறியாளர்கள் செல்வ முத்தையன், லோகநாயகி பிகோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

