/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தடுப்பணை பாதுகாப்புச்சுவர் பணி துவக்கம்
/
தடுப்பணை பாதுகாப்புச்சுவர் பணி துவக்கம்
ADDED : ஜன 06, 2026 04:16 AM

திருபுவனை: புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டத்தின் சார்பில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட சிலுக்காரிப்பாளையத்தில் பம்பையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை அருகே மழைவெள்ளதாதால் சேதம் அடைந்த ஆற்றங்கரையின் பாதுகாப்பு தடுப்புச் சுவர் மற்றும் ஆற்றங்கரை சாலை சீரைமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று பூமி பூஜை செய்து பணியை துவக்கிவைத்தார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, நீர் பாசன பிரிவு செயற்பொறியாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் ஹரிராம், ஒப்பந்ததாரர் ராமகிருஷ்ணன், மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், ஜே.சி.எம்., மக்கள் மன்ற தொகுதி தலைவர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

