sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பழமை வாய்ந்த முழியன் குளம் சீரமைக்கும் பணி தீவிரம்

/

 பழமை வாய்ந்த முழியன் குளம் சீரமைக்கும் பணி தீவிரம்

 பழமை வாய்ந்த முழியன் குளம் சீரமைக்கும் பணி தீவிரம்

 பழமை வாய்ந்த முழியன் குளம் சீரமைக்கும் பணி தீவிரம்


ADDED : ஜன 26, 2026 04:26 AM

Google News

ADDED : ஜன 26, 2026 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: பூரணாங்குப்பத்தில், மிகவும் பழமை வாய்ந்த, முழியன் குளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பத்தில், முழியன் குளம் உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக் குளம் அந்த பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு தீர்த்த குளமாக இருக்கிறது.

இந்த குளத்தில், 4 மூலைகளில் கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து, மக்களுக்கு குடிநீராகவும், விவசாயம் செய்ய, ஏற்றம் இறைத்து, அதன் மூலம் தண்ணீர் எடுத்து, விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.

1.5 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த குளம் பல ஆண்டுகளாக துார்ந்து, போய் குட்டை போல், இருந்த குளத்தை, கிராம மக்கள் மீட்டு , குளத்தை மேம்படுத்த 99 லட்சம் ரூபாய் மதிப்பில், திட்டம் தயாரிக்கப்பட்டு, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அனுமதியுடன், கடந்த ஏப்ரல் மாதம் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டது.

குளத்தை சீரமைக்கும் பணிக்கு, பல்வேறு தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதி மற்றும் என்.ஜி.ஓ.,க்கள் நிதி பெறப்பட்டு , பணிகள் நடந்து வருகிறது.

குளம் சீரமைக்கும் பணிகளில் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் தலைமையில், நிர்வாகிகள் மும்புரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us