sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி உயிரிழப்பு சந்தேக மரண வழக்கு

தொழிலாளி உயிரிழப்பு சந்தேக மரண வழக்கு

தொழிலாளி உயிரிழப்பு சந்தேக மரண வழக்கு


ADDED : நவ 20, 2024 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 04:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கட்டட தொழிலாளி தாக்குதலில் உயிரிழந்தரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வானுார், கோட்டக்கரை, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் குமார், 40; கட்டட தொழிலாளி. கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி, ஆலங்குப்பம் புதுநகர் முருகன் கோவில் அருகே தானே கிழே விழுந்து விட்டதாக கூறி தனியார் கிளினிக் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் சரியாகாததால், அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பின்பு கடந்த 11ம் தேதி மீண்டும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி கடந்த 16ம் தேதி உயிரிழந்தார். பிரேத பரிசோதனை செய்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

குமாரை அதே பகுதியைச் சேர்ந்த நபர் தாக்கியதால் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கோரிமேடு போலீசார் சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us