ADDED : மார் 28, 2025 05:16 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்; தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையத்தை சேர்ந்தவர் தேவநாதன், 35.
இவர் கடைகளில் பால் பாக்கெட்டு போடும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைகளை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்தார். வீட்டில் அவர், திடீரென மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
