நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கூலித்தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 49; கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான மாரிமுத்து வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். இதன் காரணமாக மனைவி, பிள்ளைகள் கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை மங்கலம் சாராயக்கடை எதிரில் மாரிமுத்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி ருக்மணி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.