தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பூச்சி மருந்து குடித்து தொழிலாளி சாவு

பூச்சி மருந்து குடித்து தொழிலாளி சாவு

பூச்சி மருந்து குடித்து தொழிலாளி சாவு


ADDED : அக் 07, 2024 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 10:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சிதம்பரம், தில்லைவிடங்கள், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுந்தரி. இவரது மகன் சிபிராஜ், 20; இருவரும் மறைமலையடிகள் சாலை, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் உள்ள தனியார் பிரியாணி கடையில் வேலை செய்தனர்.

கடந்த ஒரு வாரமாக சிபிராஜ் அதிக நேரம் மொபைல்போன் பேசிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு ஓட்டல் கழிப்பறைக்கு சென்று திரும்பிய சிபிராஜ் மயக்கமாக இருப்பதாக கூறி அமர்ந்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

கழிப்பறையில் சென்று பார்த்தபோது, ஓட்டலில் அடிக்க பயன்படுத்தும் பூச்சி மருந்தை சிபிராஜ் குடித்தது தெரியவந்தது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் சிபிராஜ் உயிரிழந்தார்.

உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சிபிராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us