/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு
/
அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு
ADDED : டிச 18, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, குமரகுருபள்ளத்தை சேர்ந்தவர் சவுந்தராஜன், 51; நகைக் கடையில் வேலை செய்து வந்தார்.
கருத்து வேறுபாட்டால், மனைவியை விட்டு பிரிந்து, தனது சகோதரி வீட்டில் தங்கி, வேலைக்கு சென்று வந்தார்.
அதிகமாக மது குடித்து வந்த, அவர், நேற்று முன்தினம், அதே பகுதியில், இருந்த ஓட்டல் அருகே மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.