UPDATED : நவ 04, 2026 12:12 PM
ADDED : நவ 04, 2026 12:07 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்:
சேலம் பகுதியை சேர்ந்த ராஜா, 52; இவர் திருநள்ளார் ரயில் நிலையத்தில் கூலி வேலை செய்துவந்தார். இவர் நேற்று மது போதையில் இருந்தபோது திருநள்ளாறு பிரதான சாலையில் உள்ள நுாலாறு வாய்க்கால் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த திருநள்ளார் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் ராஜா உடலை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.
