UPDATED : நவ 04, 2026 12:12 PM
ADDED : நவ 04, 2026 12:07 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் 1,000 ஆண்டு கால பழம்பெருமையை பறைசாற்றும் 'ஐம்பெரும் கோவில்களின் கல்வெட்டு ஆவண கண்காட்சி அருங்காட்சியகத்தில் வரும் 10ம் தேதி வரை நடக்கிறது.
புதுச்சேரி விடுதலை நாளை முன்னிட்டு, நேஷனல் ஹெரிட்டேஜ் டிரஸ்ட் அமைப்பின் 10ம் ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பிக்கும் வகையில், 1,000 ஆண்டு கால பழம் பெருமையை பறைசாற்றும், வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில், பாகூர் மூலநாதர் கோவில், திருபுவனை வரதராஜபெருமாள் கோவில், மதகடிப்பட்டு குண்டான்குழி மகாதேவர் கோவில், திருவண்டார்கோவில் பஞ்சனதீஸ்வரர் கோவில் ஆகிய ‘ஐம்பெரும் கோவில்களின் - கல்வெட்டு ஆவண கண்காட்சி’ நடந்து வருகிறது.
புதுச்சேரி வ.உ.சி. வீதியில் உள்ள அருங்காட்சியகத்தில் கடந்த 1ம் தேதி துவங்கிய கண்காட்சி வரும் 10ம் தேதி வரை து நடக்கிறது.
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
