UPDATED : நவ 04, 2026 12:12 PM
ADDED : நவ 04, 2026 12:07 PM

வில்லியனுார்: வில்லியனுார் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வைத்துள்ள பட்டாசுகடைகளில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு செய்து பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவிட்டார்.
வில்லியனுார் தெற்கு சப் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டில் வில்லியனுார் மற்றும் பாகூர் ஆகிய இரு வருவாய் கோட்டம் பகுதியில் தீபாவளிக்காக 79 பட்டாசு கடைகள் நடத்த உரிமை பெற்றுள்ளனர்.
இந்த கடைகளில் நேற்று மாலை சப் கலெக்டர் குமரன் தலைமையில் வருவாய் அதிகாரி பிரித்வீ மற்றும் அதிகாரிகள் பட்டாசு விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கடை உரிமையாளர்களிடம் சப் கலெக்டர் அரசு விதிறைகள் படி உரிய பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பட்டாசுகளை இருப்பு வைத்திருக்கவேண்டும். அனுமதி இல்லாத இடத்தில் பட்டாசுகளை வைத்திருந்தாலோ, விற்பனை செய்தலோ பறிமுதல் செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில் தீயணைப்பான், மணல் வாளிகள் மற்றும் தண்ணீர் வாளிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பட்டாசு கடை உரிமையாளர்களிடம் தெரிவித்தார்.
