நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: சிதம்பரம் அடுத்த புவனகிரி ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர், வீரப்பன், 42, இவர், அதே பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரி ஒருவர் மூலம், தவளக்குப்பம் ஆனந்தா நகரில், புதிய திருமண மண்டபம் கட்டும் வேலைக்கு, மண்டபத்தில், தங்கி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி, இரவு இரண்டாவது, தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
உடன் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்த விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

