ADDED : நவ 08, 2024 05:08 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: அதிகமாக மது குடித்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கரியமாணிக்கம் புது நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் 43, கூலித்தொழிலாளி. இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு ஆளான சிவக்குமார் வேலைக்கு செல்லாமல் நேற்று முன்தினம் காலை அதிகமாக மது குடித்து விட்டு அப்பகுதியில் உள்ள சாலையில் விழுந்து கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
