நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: திருபுவனை அடுத்த பி.எஸ்.பாளையம் குருசித்தானந்த கார்டனைச் சேர்ந்தவர் வேணு, 43; கூலித்தொழிலாளி. இவருக்கும் அவரது மனைவி ஜெயபிரியாவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஜெயப்பிரியா நேற்று முன்தினம் காலை அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனமுடைந்த வேணு வீட்டில் உள்ள கம்பியில் மனைவியின் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

