நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம், அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் 31; கூலி தொழிலாளி, குடிப்பழக்கம் உடையவர். சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார்.
கடந்த 15ம் தேதி நள்ளிரவு தனது தந்தையிடம் தகராறு செய்தார். அக்கம் பக்கத்தினர் ரஞ்சித்குமாரை சமாதானம் செய்து அனுப்பினர்.
மறுநாள் காலையில் அவரது தாய் பார்த்தபோது, ரஞ்சித்குமார் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருன்றனர்.