நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் சுப்பையா நகரை சேர்ந்தவர் அருணகிரி 61; கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்புமதி கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அருணகிரி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால், அவரது மனைவி அவரை கண்டித்து வந்தார். கடந்த 27ம் தேதி மாலை அன்புமதி, தனது மகனுடன் மருத்துவமனைக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது, அருணகிரி வீட்டின் கூரையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

