பாகூர்:தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த பிரகாசபுரம் பகுதியை சேர்ந்தவர் அமிர்த ஸ்டாலின் ராஜா 35; டிரைவர். இவருக்கு, நந்தினிசெல்வி சோவியா 29; என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். அமிர்த ஸ்டாலின் ராஜா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன், புதுச்சேரி மாநிலம், பாகூர் அடுத்த சேலியமேட்டில் வாடகை வீட்டில் குடியேறி, பால் சிலீங் போடும் வேலை செய்து வந்தார்.
குடி பழக்கம் காரணமாக குடும்பத்தில் பிரச்னை ஏற்படவே, கடந்த ஆண்டு அவர் மீண்டும் சொந்த ஊருக்கு சென்றார். கடந்த 2ம் தேதி புதுச்சேரிக்கு வந்த அமிர்த ஸ்டாலின் ராஜா, ஆதிங்கப்பட்டு கிராமத்தில் தங்கி, வேலைக்கு சென்று வந்தார். கடந்த 6ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதற்காக, தனது அண்ணனிடம் பணம் வாங்கி தருமாறு, தனது உறவினர் ஜேசுராஜவிடம் கேட்டார். ஜேசுராஜா நேற்று முன்தினம் மாலை ஆதிங்கப்பட்டு கிராமத்திற்கு சென்று, அமிர்த ஸ்டாலின் ராஜா தங்கி இருந்த வீட்டின் கதவை தட்டினார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை.
அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அமிர்த ஸ்டாலின் ராஜா மின் விசிறியில் துாக்கில் இறந்த நிலையில் தொங்கினார். தகவலறிந்த பாகூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனை அனுப்பினர்.
அவரது சகோதரர் ஜேசுருமாஸ் 39; அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.