நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: ஏரிப்பாக்கத்தில் கொத்தனார் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏரிப்பாக்கம் பழைய காலனியைச் சேர்ந்தவர் விஜயன், 27; கொத்தனார். இவரது மனைவி பார்கவி. இரண்டு மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான விஜயன் வேலைக்கு செல்லாமல், அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
இதனால் தம்பதிக்கு இருவரும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் குடித்துவிட்டு வந்த விஜயன், மனைவியிடம் தகராறு செய்துவிட்டு, இரவு 8:00 மணியளவில், அவரது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டு, துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.